தற்போதைய செய்திகள்

தஞ்சையில் இன்று மின்நுகர்வோர் குறை தீர்க்கூட்டம்: மக்கள் பங்கேற்க அழைப்பு

தஞ்சாவூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதில் பொதுமக்களும், மின்நுகர்வோரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

பி.ஜெகன்நாத்

தஞ்சாவூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதில் பொதுமக்களும், மின்நுகர்வோரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தஞ்சாவூர் நகரியம் மின்வாரிய இயக்கலும், பராமரித்தலும் செயற்பொறியாளர் சீ.கிருஷ்ணவேணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தஞ்சாவூர் நகர பொதுமக்களின் நலன்கருதி, மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் க.அருள்மொழி தலைமையில், தஞ்சாவூர் நீதிமன்றச் சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில் தஞ்சாவூர் நகரியக் கோட்டத்திற்கு உட்பட்ட தெற்கு வீதி, வடக்கு வீதி, மேலவீதி, கீழ வீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காந்திஜி சாலை, மருத்துவக்கல்லூரி சாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து மனு அளித்து பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

SCROLL FOR NEXT