தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான கலந்தாய்வு முகாம்: ஜூலை 1-ம் தேதி தொடக்கம் 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் நிகழாண்டிற்கான ஆசிரியர் பட்டய பயிற்சி முதலாம் ஆண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை இணைய தளம்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் நிகழாண்டிற்கான ஆசிரியர் பட்டய பயிற்சி முதலாம் ஆண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை இணைய தளம் வழியாக ஒற்றைச் சாளர முறையில் ஜூலை 1ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 4ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக பாலையம்பட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மோகன்ராம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இப்பயிற்சி சேர ஏற்கனவே மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தர வரிசை பட்டியல் தயாரித்து, இட ஒதுக்கீடு விதிமுறையை பின்பற்றி கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே விண்ணப்பித்தோருக்கு பங்கேற்பதற்கான இடம், நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதில், பங்கேற்போர் 10-ம் வகுப்பு, மேல் நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றதற்கான அசல் சான்றிதழ், ஜாதி, இருப்பிடச் சான்றிதழ்கள், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் என சிறப்பு பிரிவுகளாக இருந்தால் அதற்கான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இதில், ஜூலை 1-ம் தேதி அங்கிலம், தெலுங்கு, உருது, தொழிற்பிரிவு, அறிவியல் பிரிவு, கலைப்பிரிவு மாணவர்களுக்கும் மற்றும் சிறப்பு பிரிவினர் ஆகியோருக்கும் நடைபெற இருக்கிறது. 2-ம் தேதி கலைப்பிரிவு, தொழில் பிரிவு மாணவிகளுக்கும், 3 மற்றும் 4ம் தேதிகளில் அறிவியல் பிரிவு மாணவிகளுக்கும் கலந்தாய்வு காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது.

இக்கலந்தாய்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவிகள் தரவரிசை பட்டியலின் விவரம் www.tnscert.org என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு, கலந்தாய்வுக்கான கடிதத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT