முகப்பு
தற்போதைய செய்திகள்

பண்ருட்டியில் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் பறிமுதல்

பண்ருட்டியில் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள நாட்டு வெடிகள் மற்றும் வெடி மருந்துகளை போலீஸார் கைப்பற்றினர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:50 AM
பகிர்:

பண்ருட்டியில் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள நாட்டு வெடிகள் மற்றும் வெடி மருந்துகளை போலீஸார் கைப்பற்றினர்.

பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் அனுமதி பெற்ற  நாட்டு வெடிகள் மற்றும் மருந்துகள் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தை சேர்ந்த சிலர் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள ஒரு வீட்டில் சக்தி வாய்ந்த நாட்டு வெடிகள், மற்றும் வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட திட்டமிட்ட குற்றங்கள், மற்றும் ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் ஜெரால்டு, தலைமையிலான காவலர்கள் பன்னீர் செல்வம் ராஜகோபால் ரமேஷ் ஆகியோர் சக்ரபாணி நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகளை ஆய்வு செய்து அவற்றை கைப்பற்றினர். பண்ருட்டி ஆய்வாளர் முருகேசன் உடன் இருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →