முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆம்பூரில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து துண்டிப்பு

ஆம்பூரில் முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் காரணமாக சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Updated On : 28 ஜூன், 2015 at 3:36 PM
பகிர்:

ஆம்பூரில் முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் காரணமாக சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஆம்பூரில் முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் காரணமாக ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு பிறகு எந்த வாகனங்களும் செல்ல முடியாதவாறு போராட்டக்காரர்கள் சாலை முழுவதும் பொருட்களையும், வாகனங்களையும் சாலையின் நடுவே போட்டு தீயிட்டு எரித்தனர்.  அதனால் ஆம்பூர் வழியாக எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக வாணியம்பாடி மார்க்கத்திலும், வேலூர் மார்க்கத்திலும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டன.  சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.  இரவு சுமார் 2 மணியளவில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

Advertisement

நள்ளிரவு 12 மணிக்கு பிறகு வடக்கு மண்டல ஐஜி எம்.என். மஞ்சுநாதா தலைமையிலான சிறப்பு அதிரடிப்படை போலீஸôர் ஆம்பூருக்கு வருகை தந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.   போராட்டக்காரர்களை அவர்கள் அடித்து விரட்டினர்.  அதன் பிறகே போராட்டக்காரர்கள் தப்பியோடி தலைமறைவானார்கள்.

தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.  அதிலும் குறிப்பாக அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு செல்ல வாகனங்களில் வந்த நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

108 ஆம்புலன்ஸ் வாகனத்தையே அவர்கள் அடித்து நொறுக்கியதால் நோயாளிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் அச்சத்துடனேயே ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களில் தங்களுடைய வாகனங்களில் நிறுத்திவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.