முகப்பு
தற்போதைய செய்திகள்

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்வு: அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2.80 அடி உயர்ந்து திங்கள்கிழமை 83.80 அடியாக இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைகளின் நீர்வரத்து

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:52 AM
பகிர்:

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2.80 அடி உயர்ந்து திங்கள்கிழமை 83.80 அடியாக இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைகளின் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி குண்டாறு அணையில் மட்டும் 3 மி.மீ மழை பெய்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைகளின் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,328.47 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 391 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 125.47 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 50.27 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 58 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 45 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 17.31 கனஅடியும், நம்பியாறு அணைக்கு விநாடிக்கு 26 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

உபரிநீர் திறப்பு:

52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியதும் அணைக்கு வந்து கொண்டிருந்த 78.15 கனஅடி உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2.80 அடி உயர்ந்து 83.80 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 99.65 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.95 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 61 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 58.50 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 1.31 அடி உயர்ந்து 66.93 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 2.50 உயர்ந்து 79.50 அடி,

வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 29.50 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.53 அடியாகவும் இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →