முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சமுதாயத்தினரிடையே மோதல்: பதற்றம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். 92 வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டனர். போலீஸார் பலர் மீது

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சமுதாயத்தினரிடையே மோதல்: பதற்றம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். 92 வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டனர். போலீஸார் பலர் மீது

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:52 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். 92 வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டனர். போலீஸார் பலர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரைக் கைது செய்துள்ளனர். இப் பகுதியில் பதற்றம் நீடிப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கான்சாபுரம், மங்கம்மாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணிதேவர் மகன் அர்ஜூனன் (32). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் தனியார் பேருந்தில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து தனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். ஆத்தாரங்கரைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஒரு கும்பல் பேருந்தினுள் பயங்கர ஆயுதங்களுடன் ஏறி, கான்சாபுரத்துக்காரன் யார் இருக்கிறான் என்று தேடியுள்ளது. அப்போது அர்ஜூனனை கும்பலைச் சேர்ந்த ஒருவர் அடையாளம் காட்டியுள்ளார். அவர் எழும்பி தப்பி ஓட முயலும் போது, அக் கும்பல் அவரை நகர விடாமல் தடுத்து நிறுத்தி ஆபாசமாகப் பேசி, அடித்து கொலை செய்ய முயன்றுவிட்டு, தப்பி ஓடிவிட்டது.

இது குறித்து அர்ஜூனன் கூமாப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்து புகாரின் பேரில் போலீஸார் பட்டுப்பூச்சியைச் சேர்ந்த ரோ.தனபால், ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த கூ.ராஜா, லோடுமேன் ராசு, ப.ராஜேஸ், இ.கருத்தநாய் (எ) ராஜ்குமார், ரா.ஆனந்த், வெ.வேனல் (எ) வெயிலுமுத்து, வே.செங்கோடான், வே.பாண்டி (எ) சின்னச்சாமி, க.தமிழரசன் ஆகிய 10 பேர் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.

5 ஏக்கர் வாழை வெட்டி சாய்ப்பு:

இதன் தொடர்ச்சியாக இக் கும்பல் திங்கள்கிழமை அதிகாலை, கான்சாபுரத்திற்கு மேற்கே பாரளம் குளம் கண்மாய்க்கு வடக்கேயுள்ள குருவையாத்தேவர் மகன் கண்ணன் (35) என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து அங்கு 5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை வெட்டி சாய்த்தது. பின்னர் அங்கு பம்புசெட் அறையில் காவலுக்கு இருந்த குருவையாத்தேவர் மற்றும் தோட்ட காவலரை ஆபாசமாகப் பேசி, அங்கிருந்து தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்டவற்றை சூறையாடிவிட்டு இவர்கள் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்களாம்.

இது குறித்து கண்ணன், கூமாப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தோட்டத்திலிருந்த 92 வாழை மரங்களை வெட்டி சாய்த்து இக் கும்பல் சேதப்படுத்தியதாயும், சேத மதிப்பு ரூ.50 ஆயிரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலைத் தேடி வருகிறார்கள்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். தற்போது காவல் துணைக் கணக் கண்காணிப்பாளர் கே.முரளிதரன் தலைமையில் இப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து இப் பகுதியில் இரு சமுதாயத்தினர் மோதிக் கொள்ளும் சூழல் நிலவுகிறது. இச் சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →