முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆரணியில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்த வாலிபர் கைது

ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள சக்திநகரைச் சேர்ந்த ஜேம்ஸ் மகள் நிவேதா(28) என்பவருக்கும், ஸ்டாலின் என்பவருக்கும் சுமார் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர்

Updated On : 1 மார்ச், 2015 at 5:07 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:41 AM

ஆரணியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்த வாலிபரை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்தனர்.

ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள சக்திநகரைச் சேர்ந்த ஜேம்ஸ் மகள் நிவேதா(28) என்பவருக்கும், ஸ்டாலின் என்பவருக்கும் சுமார் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு 2 வருடங்களுக்கு முன்பு நிவேதா தாய் வீட்டிற்கு திரும்பினார். பின்னர் வீட்டில் தாய் மலர், தந்தை ஜேம்ஸ், அக்கா, தங்கையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நிவேதாவிற்கும், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் பிரசாந்த் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பிரசாந்திற்கு இன்னும் திருமணமாகவில்லை. இருவரும் அடிக்கடி தனியாக சந்திக்கொண்டுள்ளனர். இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு நிவேதாவின் கணவர் ஸ்டாலின் நிவேதா வீட்டிற்கு சென்று பெரியவர்களுடன் பேசி அழைத்துச்செல்ல முடிவு செய்தார். சிறிது காலம் கழித்து அனுப்புகிறோம் என்று ஸ்டாலினை அனுப்பி வைத்துள்ளனர்.இதனை அறிந்த பிரசாந்த் ஆத்திரமடைந்து அப்போதே மோட்டார் சைக்கிள் எடுத்துக்கொண்டு வேகமாக சென்று நிவேதாவை மோதினார். இதனால் நிவேதாவிற்கு கால் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

Advertisement

இந்நிலையில் ஸ்டாலின் மீண்டும் நிவேதாவுடன் பேசி ஒரு வார காலத்திற்குள் அழைத்துச்செல்ல முடிவு செய்தார். இதனையும் அறிந்த பிரசாந்த் கத்தியை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் நிவேதாவின் வீட்டிற்கு சென்று பிப் 27 அன்று மதியம் வீட்டில் தனியாக இருந்த நிவேதாவை கத்தியால் கழுத்துப் பகுதியல் குத்தினார். இதனால் நிவேதா அலறினார். கூச்சல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். பிரசாந்தை பிடிக்க முயற்சி செய்தும் தப்பி ஓடினார்.

பின்னர் நிவேதாவை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இது குறித்து கிராமிய போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரசாந்தை தேடிவந்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆரணி கிராமிய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்ஐ ஷாபுதீன் ஆகியோர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது வேலப்பாடி பகுதியில் இருந்து மெயின்ரோடுக்கு பஸ் ஏற வந்த பிரசாந்த்தை மடக்கி பிடித்தனர்.  பின்னர் மேற்கூறிய தகவலை வாக்குமூலமாக கொடுத்தார். இதனால் போலீஸார் பிரசாந்தை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.