முகப்பு
தற்போதைய செய்திகள்

பெண் கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், நெல்கட்டும்செவலில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:51 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், நெல்கட்டும்செவலில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய் கிழமை தீர்ப்பளித்தது.

புளியங்குடி அருகேயுள்ள நெல்கட்டும்செவலைச் சேர்ந்தவர் முருகன் (28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி (25). இத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். 21-11-2012 அன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முருகன், கலைச்செல்வியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இதுகுறித்து புளியங்குடி போலீஸார் வழக்குப்பதிந்து முருகன், அவரது தாயார் வெள்ளைதுரைச்சி ஆகியோரை கைது செய்தனர்.  இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நசீர்அகமது, குற்றஞ்சாட்டப்பட்ட முருகனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். வெள்ளைதுரைச்சியை விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் மாவட்ட அரசு வழக்குரைஞர் என்.சிவலிங்கமுத்து ஆஜரானார்.

முழு கட்டுரையைப் படிக்க →