முகப்பு
தற்போதைய செய்திகள்

பொதுத்தேர்வு: மாணவர்களுக்கு வைகோ வாழ்த்து

அரசு பொதுத் தேர்வு எழுதும் 10-ஆம் வகுப்பு, ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:52 AM
பகிர்:

அரசு பொதுத் தேர்வு எழுதும் 10-ஆம் வகுப்பு, ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- ப்ளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19-ஆம் தேதியும் தொடங்க உள்ளது.

மாணவர்களை உயர்க்கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயிலாகப் பொதுத்தேர்வுகள் விளங்குகின்றன.

தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிக்கூடப் பகுதிகளில் அரசியல் கட்சிகளோ, இதர அமைப்புகளோ, திருவிழா கொண்டாடும் குழுவினரோ சத்தமாக ஒலிப்பெருக்கியை இயக்கிடுவதை முற்றாகத் தவிர்த்திட முன்வர வேண்டும்.

வருங்கால தமிழகத்தின் வார்ப்புகளாக விளங்கிடும் மாணவச் செல்வங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →