முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர் 6 பேர் கைது

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:53 AM
பகிர்:

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.

நாகப்பட்டினத்துக்கு 120 கடல் மைல் தூரத்தில் இலங்கையை சேர்ந்த 1 படகில் 6 மீனவர்கள் வியாழக்கிழமை இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். ரோந்துப் பணியிலிருந்த இந்திய கடலோரக் காவல்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

மீனவர்களையும், அவர்களது படகுகளை கடலோரக் காவல்படையினர் காரைக்கால் துறைமுகத்துக்கு கொண்டுவருகின்றனர். இவர்கள் வெள்ளிக்கிழமை மாலை துறைமுகம் வந்து சேர்வார்கள் என கடலோரக் காவல்படையின் காரைக்கால் மைய கமாண்டன்ட் உதல்சிங் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →