முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து  தொல்.திருமாவளவன் கண்டனம்

மகாராஷ்டிர மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட வந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:53 AM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட வந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

இந்துத்துவத்தின் சோதனைக்கூடமாக குஜராத் மாநிலத்தை வைத்திருந்த அடிப்படைவாதிகள் இப்போது மகராஷ்டிர மாநிலத்தை அடுத்த சோதனைக்கூடமாக உருமாற்றி வருகின்றனர்.

மாட்டிறைச்சி விற்பதற்கும் உண்பதற்கும் தடை விதித்திருப்பதோடு மாட்டிறைச்சியை வைத்திருந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை என அந்த மாநிலத்தில் சட்டம் போடப்பட்டுள்ளது. 

ஒருவர் எதைச் சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் அரசாங்கத்துக்குக் கிடையாது.

மக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் இந்தச் சட்டத்துக்கு எப்படி குடியரசுத் தலைவர் அனுமதி வழங்கினார் எனத் தெரியவில்லை.

இந்தக் கொந்தளிப்பு ஓய்வதற்குள் முஸ்லிம்களுக்கு கல்வியில் வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை இப்போது அம் மாநில அரசு ரத்து செய்துள்ளது. முஸ்லிம்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என மும்பை உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ள நிலையில் பாஜக அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு மக்களவையில் பெரும்பான்மையைப் பெற்றிருந்த போதிலும் மாநிலங்களவையில் அதற்குப் பெரும்பான்மை இல்லை. அதனால் அவர்கள் விரும்பும் சட்டங்களைக் கொண்டுவர முடியவில்லை.

எனவே, பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் தனது சோதனைகளைச் செய்துபார்த்து 2017-இல் மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற்றதும் இந்தியா முழுமைக்கும் அந்தச் சட்டங்களைக் கொண்டுவரத் திட்டமிடுகின்றனர். மகராஷ்டிர அரசின் மதவெறி போக்கைக் கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →