மேற்கு ஆரணி ஒன்றிய உரக்கடைகளில் வேளாண் அதிகாரி திடீர் ஆய்வு
மேற்குஆரணி ஒன்றியத்தில் உள்ள உரக்கடைகளில் சரியான முறையில் உரம் விற்பனை செய்கிறார்களா என்று மேற்கு ஆரணி
மேற்குஆரணி ஒன்றியத்தில் உள்ள உரக்கடைகளில் சரியான முறையில் உரம் விற்பனை செய்கிறார்களா என்று மேற்கு ஆரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி திடீர் ஆய்வு செய்தார்.
மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள உரக்கடைகளில் உரம் விற்பனைக்கான உரிமம், இருப்பு பதிவேடு, ரசீது மற்றும் கணக்கு புத்தகம் ஆகியவற்றை மேற்குஆரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி ஆய்வு செய்தார். மேலும் உரம் விற்பனையின்போது விவசாயிகளுக்கு ரசீது கட்டாயம் வழங்குகிறார்களா என்றும், சரியா விலையில் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார்.
மாதாந்திர இருப்பு விவரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று உரக்கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார்.
Advertisement
மேலும் உரம் வாங்கும் விவசாயிகள் கட்டாயம் ரசீது வாங்குங்கள் என்று கேட்டுக்கொண்டார்.