தற்போதைய செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

அங்கன்வாடிகளை தனியார்மயமாக்குவதை அரசு கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ். பாண்டியன்

அங்கன்வாடிகளை தனியார்மயமாக்குவதை அரசு கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்தப்பட்ட தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.மோகனவல்லித்தாயார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அங்கம்மாள் முன்னிலை வகித்தார்.
    இதில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை முழு நேர ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது குறைந்தபட்ச பென்சனாக ரூ.3050 வழங்கவும் மற்றும் பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.2 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.1 லட்சமும் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியிறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் சங்கம், அரசு ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

மக்கள் குறைதீா் கூட்டம்: 467 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT