சைபர் குற்றங்களைக் கண்டுபிடிக்க போலீஸாருக்கு போதிய பயிற்சி அவசியம்: உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம்
சைபர் குற்றங்களைத் தடுக்க, போலீஸாருக்கு போதிய பயிற்சி அளித்தாலே, அவர்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தர இயலும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின்
தற்போதைய செய்திகள்சைபர் குற்றங்களைக் கண்டுபிடிக்க போலீஸாருக்கு போதிய பயிற்சி அவசியம்: உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம்
சைபர் குற்றங்களைத் தடுக்க, போலீஸாருக்கு போதிய பயிற்சி அளித்தாலே, அவர்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தர இயலும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின்
சைபர் குற்றங்களைத் தடுக்க, போலீஸாருக்கு போதிய பயிற்சி அளித்தாலே, அவர்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தர இயலும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி சி.டி.செல்வம் கூறினார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை தேசிய சைபர் குற்றங்களுக்கான பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்து நீதிபதி சி.டி.செல்வம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
தற்போதுள்ள சட்டங்கள் மூலம் சைபர் குற்றங்களைத் தடுப்பது கடினம். மேலும் கடுமையான சட்டங்கள் தேவை. காவல் துறைக்கு போதிய பயிற்சியளித்தால் மட்டுமே, அவர்கள் சைபர் குற்றங்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர இயலும்.இந்தியாவில் முதல் முறையாக இந்த ஆராய்ச்சி மையம் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படுவதற்கு மூலக்காரணமே இங்கு போதிய அளவு ஆராய்ச்சிகூட வசதியும், ஆராய்ச்சி மாணவர்களும் நிரம்பியிருப்பதுதான்.
இன்டர்நெட் மூலம் தனிநபர் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். இதைக் கண்டுபிடிக்க வேண்டும். கணினி குற்றம் கண்டுபிடிக்கும் தடயவியல் கோணங்களை கலசலிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கூடம் உருவாக்கும். இது தேசத்திற்கு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கும் உதவுவதுடன், அவர்களின் ஆராய்ச்சிப் பணியை இது வேகப்படுத்தும் என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கு தலைமையேற்று லோக் அதாலத் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் பேசுகையில் கூறியதாவது:
கர்நாடகா மாநிலம் பெங்களூரு தகவல் தொழில்நுட்பத்தில் பெயர் பெற்றிருக்கலாம். ஆனால் அங்கு பணிபுரிபவர்கள் எல்லாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் என்னென்ன வளங்கள் எங்கு உள்ளன என்பதை வெளிநாடுகள் சாட்லைட் மூலம் காண்கின்றன. நாம் அணியும் கோட்டில் உள்ள பட்டனிலோ, பேனா, கேமிரா, கடிகாரம் உள்ளிட்ட பல ரூபத்தில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுத்திட வழிகாணும் முயற்சிதான் இந்த ஆராய்ச்சி மையம். எந்தப் பணியுமே ஒரே குழுவாக ஒற்றுமையாக செயல்பட்டால் வெற்றி பெற இயலும். வெளிவரும் குற்றங்களை கண்டுபிடித்து தடுத்து நிறுத்த வேண்டும். கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மையம், மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளை நாட்டின் பாதுகாப்பிற்கு, குறிப்பாக பெண்கள் பாதுகாப்புக்குக வழங்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.
சைபர் குற்றங்கள் தடுப்பு டி.ஜி.பி. எஸ்.அமர்பிரசாத்ரெட்டி பேசுகையில் கூறியதாவது:
இந்திய அரசு சைபர் குற்றங்களை தடுத்திட போதியளவு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், அவை மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கின்றன. இதை சரியான முறையில் தடுக்காவிட்டால் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். கடந்த இரு ஆண்டுகளில் இந்தியாவில் 40 சதவீதம் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 497 கோடி மதிப்பில் 37,721 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் மோசடி, கிரிடிட் கார்டு மோசடி, ஆபாசக் காட்சி போன்றவற்றை வெளியிட்டு குற்றம் புரிதல் மூலம் 62,189 வழக்குகள் 2014-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
9174 இந்திய வெப்சைட்கள் உலகம் முழுவதும் திருடப்பட்டுள்ளது (Hacked). தேசிய சைபர் குற்றங்களுக்கான பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு விஷயத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். வெளிநாட்டு பயங்கரவாத சக்திகள் சைபர் குற்றவாளிகள் மூலம் நம் நாட்டுக்குள் ஊடுருவுவதை தடுக்க நாம் முனைப்போடு செயல்பட வேண்டும்.2015-ம் ஆண்டு சைபர் குற்றங்கள் அளவு 3 லட்சமாக உயரும் அபாயம் உள்ளது. 302 மில்லியன் மக்கள் இன்டர்நெட் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் இந்தியாவில் சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான திறன்களை வளப்பதற்கு முன்னுரிமை தரப்படுகிறது. இந்தியாவை சமீபகாலமாக அமெரிக்கா, துருக்கி, சீனா, பிரேசில், அல்ஜீரியா, பாகிஸ்தான், ஐரோப்பா போன்ற நாடுகள் குறிவைத்து தாக்குகின்றன. இதன் பின்னணி என்னவென்று ஆராய்ந்தால், இந்தியாதான் சைபர் குற்றவாளிகளை உருவாக்குவதற்கு ஏற்ற நாடாக உள்ளது என்று கூறுகிறார்கள்.
சைபர் கேக்கிங், சைபர் பிராட், சைபர் போர்னோகிராபி, சைபர் டெரரிசம் போன்றவற்றின் மூலம் இன்று சைபர் குற்றங்கள் செய்யப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்திட இந்தியா முழுவதும் ஆராய்ச்சி மையங்களைத் தோற்றுவிக்க என்.சி.டி.ஆர்.சி. முயன்றது. அதில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் கல்வி நிறுவனங்களை நாங்கள் ஆராய்ந்ததில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தொடங்க முடிவு செய்தோம். இங்கு ஆராய்ச்சிக்கான அனைத்து வசதிகளும், ஆய்வுக்கூடங்களும், ஆய்வு மாணவர்களும் உள்ளனர். எனவே நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்திட கலசலங்கம் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வுகள் பயன்படும் என்றார் அவர்.முன்னதாக கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மையத்தின் ஆய்வகத்தை நீதிபதிகள் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் துணை வேந்தர் ச.சரவணசங்கர் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை வேந்தரின் தனிச் செயலாளர் முரளி கிருஷ்ணா வழங்கி கௌரவித்தார். பதிவாளர் வெ.வாசுதேவன் உள்பட ஏராளமான பேராசிரியர்கள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பேராசிரியர் எஸ்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.