தற்போதைய செய்திகள்

பேய்க்குளத்தில் கடையை மறித்து கழிப்பறை கட்ட நீதிமன்றம் தடை: பணிகள் நிறுத்தம்

சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் வாகன பழுது நீக்கும் கடையை மறித்து கழிப்பறை கட்டுவதற்கு சாத்தான்குளம் உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையொட்டி

கவிதன்

சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் வாகன பழுது நீக்கும் கடையை மறித்து கழிப்பறை கட்டுவதற்கு சாத்தான்குளம் உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையொட்டி கட்டுப்மான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பஜாரில் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ6 லட்சம் மதிப்பில் பஸ் நிறுத்ததுடன் கூடிய  கழிப்பிடம் கட்ட முடிவு செய்து அங்குள்ள சாலைபுதூர் செல்லும் சாலையோரம் இடம் பெற்று பணிகள் தொடங்கப்பட இருந்தன. இந்நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி  இளைஞர் காங்கிரஸ்  செயலர் அந்தோணிராஜசிங், தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கழிப்பறை கட்ட வலியுறுத்தி நூதன போராட்டம் நடத்த போவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து சாத்தான்குளம் வட்டாட்சியர் பா. வாலசுப்பிரமணியன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஆணையர் லீமாரோஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பணிகள் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் அதே இடத்தில் வாகன பழுது நீக்கும் கடை நடத்தி வரும் பழனியப்பபுரத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் குருபாதம் சாமுவேல், எதிர்ப்பு தெரிவித்து கடை முன் கழிப்பறை அமைத்தால் எனது  தொழில் பாதிக்கப்படும். அதை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அதிகாரிகள் அவரது கோரிக்கையை ஏற்காமல் பணிகளை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் பேய்க்குளம் வியாபாரிகள் சங்கத்திடம் முறையிட்டார். அதன்பேரில் வியாபாரிகள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் துரைராஜ் , அவரது மகன் குருபாதம் சாமுவேல் ஆகியோர் சாத்தான்குளம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிட்டனர். வழக்கை விசாரித்த மாவட்ட உரிமையியல் நீதிபதி பசும்பொன்சண்முகையா, இந்த வழக்கு முடியும் வரை அவர்களது கடைக்கு முன்பு கழிப்பறை கட்டுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என  வெள்ளிக்கிழமை தடை உத்தரவு பிறபித்து , மாவட்ட ஆட்சியர், ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஆணையர் மற்றும் ஒப்பந்தகாரர்களுக்கு ஆணை பிறபித்தார். இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு ஆதரவாக  வழக்குரைஞர் வாசகராஜன் ஆஜரானார். 

இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது தெரியாமல் சனிக்கிழமை பணிகள் நடந்து வந்தது. இதைதொடர்ந்து புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி - ஆய்வாளர் பெ. பால்துரை சென்று பணிகள் தடுத்து நிறுத்தினார். இதனால் பேய்க்குளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT