முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக நகர ஒன்றிய, பேரூராட்சி பொறுப்பாளர்களுக்கான அமைப்புத் தேர்தல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர, ஒன்றிய மற்றும் பேரூராட்சி அதிமுக பொறுப்பாளர்களுக்கான அமைப்புத் தேர்தல்களுக்கு மனு தாக்கல் செய்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சித் தொண்டர்கள்

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக நகர ஒன்றிய, பேரூராட்சி பொறுப்பாளர்களுக்கான அமைப்புத் தேர்தல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர, ஒன்றிய மற்றும் பேரூராட்சி அதிமுக பொறுப்பாளர்களுக்கான அமைப்புத் தேர்தல்களுக்கு மனு தாக்கல் செய்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சித் தொண்டர்கள்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:57 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர, ஒன்றிய மற்றும் பேரூராட்சி அதிமுக பொறுப்பாளர்களுக்கான அமைப்புத் தேர்தல்களுக்கு மனு தாக்கல் செய்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சித் தொண்டர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரப் பொறுப்பாளர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஒன்றியப் பொறுப்பாளர்கள், மம்சாபுரம், வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், எஸ்.கொடிக்குளம் ஆகிய 5 பேரூராட்சிகளின் பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கு மனு தாக்கல் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் நகரச் செயலாளர் உள்ளிட்ட 9 கட்சி பொறுப்புகளுக்கு மனு தாக்கல் நடைபெற்றது. தற்போது நகரச் செயலாளராக உள்ள வி.டி.முத்துராஜ், கட்சி மேலிடத்திலிருந்து மனு பெற பொறுபாளராக நியமிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்ட ஊராட்சி தலைவி தனலட்சுமி கிருஷ்ணமூர்த்தியிடம் மனு தாக்கல் செய்தார்.

அப்போது கட்சியின் நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், அதிமுக பிரமுகர் செல்லம்பிள்ளை, நகர்மன்ற துணைத் தலைவி சரோஜா நடராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர்கள் பதவிக்கு மனு வாங்கும் நிகழ்ச்சி மல்லியிலும், மம்சாபுரம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் பதவிக்கு மனு வாங்கும் நிகழச்சி மம்சாபுரத்திலும், வத்திராயிருப்பு ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்கள் பதவிக்கு மனு வாங்கும் நிகழ்ச்சி தனித் தனியே இரு இடங்களிலும் நடைபெற்றது. மேலும் எஸ்.கொடிக்குளம், சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி ஆகிய பேரூராட்சி பொறுப்பாளர்களை தேர்வு செய்தவற்கான மனு தாக்கல் அந்ததந்த இடங்களில் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →