முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்: செங்கல் உற்பத்தி பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அறுவடை பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:57 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அறுவடை பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை மில்லி மீட்டரில்: பாபநாசம் அணை 22, சேர்வலாறு அணை 13, மணிமுத்தாறு அணை 4.6, கடனாநதி அணை 1, ராமநதி அணை 6, கருப்பாநதி அணை 5, குண்டாறு அணை 4, தென்காசி 9, செங்கோட்டை 10, நான்குனேரி 5, மூலக்கரைப்பட்டி 40, அம்பாசமுத்திரம் 8.2, பாளையங்கோட்டை 5.2, திருநெல்வேலி 2, சேரன்மகாதேவி 23, ஆலங்குளம் 35, ஆய்க்குடி 3.2.

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், செங்கோட்டை, நான்குனேரி பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் அறுவடை பருவத்தில் நெற்பயிர் நீரில் மூழ்கி சாய்ந்து காணப்பட்டன. பிசான பருவ அறுவடை நடைபெற்று வரும் நிலையில் மழை பெய்து வருவதால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய கிட்டங்கி வசதி இல்லாத நிலையில் சாலையோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகள் மழையில் நனைந்தன. நெல் மூடைகளை விவசாயிகள் உதவியுடன் மையங்களில் இருந்து அப்புறப்படுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

செங்கல் உற்பத்தி பாதிப்பு: மழையால் அம்பாசமுத்திரம், சிவந்திபுரம், கல்லிடைக்குறிச்சி, மூலச்சி, முக்கூடல் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட செங்கல்கள் சேதமடைந்தன. செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்தில் மாற்றம் உள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 503 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 315 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 78.80 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 91.01 அடி, மணிமுத்தாறு அணை 89.70 அடி, கடனாநதி அணை 27.40 அடி, ராமநதி அணை 25 அடி, கருப்பாநதி அணை 24.67 அடி, அடவிநயினார் அணை 29 அடி, வடக்குப் பச்சையாறு அணை 40 அடியாகவும் இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →