முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் மருத்துவமனையில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை

திருமணம் நின்று போனதால், இடுப்பு எலும்பு உடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூக்கு போக்கு போட்டு தற்கொலை

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:58 AM
பகிர்:

திருமணம் நின்று போனதால், இடுப்பு எலும்பு உடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம் அருகே பி.முட்லூர் தீத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன் (34). இவர் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் சில மாதங்கள் முன்பு முருங்கை மரத்திலிருந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு உடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவருக்கு இடுப்பு எலும்பு உடைந்ததால், நடக்க முடியாமல் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பெண் வீ்ட்டார் திருமணம் வேண்டாம் என கூறியதாக தெரிகிறது.

இதனையறிந்த குபேந்திரன் மனமுடைந்து மருத்துவமனையில் உள்ள ஜன்னலில் பேன்டேஜ் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுளளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.