முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை எரித்து கொலை செய்தவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை எரித்துக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை எரித்து கொலை செய்தவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை எரித்துக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:59 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை எரித்துக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி, நாடார் மேலத் தெருவைச் சேர்ந்தவர் பிள்ளையார் மகன் கணேசன் (48). இவரது மனைவி கஸ்தூரி (50). இவர்களுக்கு அகத்தீஸ்வரன் (21) என்ற மகன் உண்டு. கணேசன் ராஜபாளையத்தில் உள்ள காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார். கஸ்தூரி தனியார் நூற்பு ஆலையில் கூலி வேலை செய்து வந்தார்.

மது குடிக்கும் பழக்கம் உள்ள கணேசன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். வியாழக்கிழமை இரவு கணேசனுக்கு கஸ்தூரி சமைத்து வைக்கவில்லையாம். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கணேசன் மனைவியை தலையில் கம்பால் அடித்துள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்து உயிருக்குப் போராடி, புலம்பிக் கொண்டு இருந்துள்ளார். ஆத்திரம் தீராத கணேசன், மண்ணெண்ணையை கஸ்தூரி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அவர் உடல் முழுவதும் எரிந்து கருகி உயிரிழந்தார்.

வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணேசனைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →