கலசலிங்கம் கலைக் கல்லூரியில் வளாக நேர்காணல்: 13 பேர் தேர்வு
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விப்ரோ
தற்போதைய செய்திகள்கலசலிங்கம் கலைக் கல்லூரியில் வளாக நேர்காணல்: 13 பேர் தேர்வு
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விப்ரோ
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விப்ரோ டெக்னாலஜி நிறுவனம் சனிக்கிழமை நடத்திய வளாக நேர்காணலில் 13 மாணவ மாணவியர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
கலசலிங்கம் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டம் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்த வளாக நேர்காணலை விப்ரோ நிறுவனத்தின் மனித வள மேலாண்மை அலுவலர் ஜேம்ஸ் ஸ்டீபன், லினோவான், சத்தியநாராயணா ஆகியோர் ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் மூலம் நடத்தினர். இதில் தேர்வு பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நேர்காணலில் 13 மாணவ மாணவியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
வளாக நேர்காணலுக்கு முன்பாக நிறுவனம் குறித்து அலுவலர் ஜேம்ஸ் ஸ்டீபன் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது: விப்ரோ நிறுவனம் உலக அளவில் தகவல் தொழில்நுட்ப சேவை புரிந்து வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியில் சேருவோருக்கு இலவசமாக எம்.டெக் படிப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படுவதுடன், பதவி உயர்வுக்குத் தேவையான நவீன தொழில் நுட்பத்தில் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது என்றார்.
வேலை வாய்ப்பு பெற்றுள்ள மாணவ மாணவியரை கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன், கல்லூரி முதல்வர் எஸ்.செல்வமணி, கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் டாக்டர் எம்.சுப்புராஜ் ஆகியோர் பாராட்டினர். வளாக நேர்காணலுக்கான ஏற்பாடுகளை, கல்லூரியின் வேலை வாய்ப்பு அலுவலர் பேராசிரியர் எஸ்.சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.