முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருநெல்வேலியில் தனியார் கல்லூரி மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கினை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:00 AM
பகிர்:

திருநெல்வேலியில் தனியார் கல்லூரி மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கினை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்னாவில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவர்கள் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கல்லூரிக்குள் புகுந்து போலீஸார் இரு மாணவர்களை தாக்கி உள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும் மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டு்ம். மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் அமைப்பின் மாநில தலைவர் பி. உச்சிமகாளி தலைமையில் திங்கள்கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.

கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் ஆட்சியர் அலுவலக பிரதான வாசலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.தொடர்ந்து மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாணவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதில் அமைப்பின் மாவட்டத் தலைவர் பி. கார்த்திக், செயலர் சி. திருமலைநம்பி உள்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →