தற்போதைய செய்திகள்

செயற்கை உபகரணங்கள்: மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் ஆகியோர் வேகமாக செயல்படும் வகையிலான செயற்கை உபகரணங்கள் பெற மாவட்ட விளையாட்டு அலுவலகம் மூலம்

எஸ். பாண்டியன்

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் ஆகியோர் வேகமாக செயல்படும் வகையிலான செயற்கை உபகரணங்கள் பெற மாவட்ட விளையாட்டு அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

மாநில, தேசிய, பன்னாட்டு மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளி்ல் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இவர்கள் வேகமாக செயல்படும் வகையில் செயற்கை உபகரணங்கள் வழங்கப்பட இருக்கிறது. அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் துரிதமாக செயல்படுவதற்காக தலா ரூ.2 லட்சத்தில் செயற்கை உபகரணங்கள் பயனாளிகளுக்கு பாதிப்புகள் ஏற்படுத்தாத வகையில் வழங்கப்பட இருக்கிறது.

இந்த உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து அவர் பரிந்துரை செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை உபகரணங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் அலுவலகம் மூலம் வழங்கப்பட இருக்கிறது.

எனவே தகுதியான மாற்றுத்திறனாளிகள் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் வருகிற 27-ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். அதோடு, அதன் நகலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிடமும் நேரில் சமர்பித்து பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜுலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

SCROLL FOR NEXT