தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாரியம்மன் கோயில்: பக்தர்களுக்கு இடையூராக இருந்து வரும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

விருதுநகரில் மாரியம்மன் கோயில் வளாகப்பகுதியில் பக்தர்களுக்கு இடையூராக இருந்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்து

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மாரியம்மன் கோயில் வளாகப்பகுதியில் பக்தர்களுக்கு இடையூராக இருந்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

விருதுநகர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதி பொதுமக்களும் கொண்டாடும் ஊர்த்திருவிழாவாக பராசக்தி மாரியம்மன் கோயில் விழா உள்ளது. இந்த பாரம்பரிய திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்பர். இவ்விழா பங்குனி மாதம் கொடியேற்றத்தைத் தொடர்ந்து ஒரு வாரம் வரையில் சிறப்பாக கொண்டாடப்படும். அவ்வகையில் வருகிற 19-ம் தேதி கொடியேற்றம் நடைபெற இருக்கிறது.

தற்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அம்மனுக்கு அக்னிச் சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்கள் செலுத்த இருக்கும், பெண் பக்தர்கள் இரவு முழுவதும் அம்மனை குளிர்விப்பதற்காக தெப்பக்குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்து வழிபாடு செய்வார்கள். இதில், விருதுநகருக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பேர்கள் வழிபாடு செய்வதற்காக வந்து செல்வார்கள்.

இந்நிலையில் கோயிலுக்கு வரும் சாலையோர பகுதிகளும் கடைக்காரர்களால் ஆக்கிமிப்புச் செய்யப்பட்டு குறுகிய சாலையாக இருந்து வருகிறது. அதேபோல்,   திருக்கோயில் அருகே பக்தர்களுக்கு இடையூராக சிலைக் கடைகள், பூக்கடைகள், மண்பாண்டங்கள் கடை விரித்து ஆக்கிரமித்துள்ளனர். எனவே சாலையின் இருபுறமும் கடைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் குறுகிய பாதையில் பக்தர்கள் நெருக்கடியுடன் வந்து கோயிலில் வழிபாடு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

அதேபோல், பக்தர்கள் பெரும்பாலும் கோயிலுக்கு முன்புறமாகவே பொங்கல் வைக்க விரும்புவர். அந்த இடமும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் குறுகிய இடத்தில் பொங்கலிடும் பெண்கள் மிகவும் சிரமப்படும் சூழ்நிலை உள்ளது. அதற்கு எதிர் புறத்தில் எளிதாக தீப்பற்றக் கூடிய பருத்திமார் கட்டுக்களையும் விற்பனைக்கு வைத்துள்ளனர். இதுபோன்றவைகளை காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் கவனத்தில் கொண்டு ஒழுங்குபடுத்த வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜுலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

SCROLL FOR NEXT