முகப்பு
தற்போதைய செய்திகள்

முன் கார் பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணைத் திறப்பு

மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் மதகு மூலம் பாசனம் பெறும் 2,757 ஏக்கர் நிலங்களுக்கு முன் கார் பருவ சாகுபடிக்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் மதகு மூலம் பாசனம் பெறும் 2,757 ஏக்கர் நிலங்களுக்கு முன் கார் பருவ சாகுபடிக்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.

மணிமுத்தாறு அணையில் பெருங்கால் மதகு மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அணையில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் ம.க. குழந்தைவேல் தண்ணீர் திறந்தார்.

இந்நிகழ்ச்சியில், தாமிரவருணி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் கே.ஏ. அப்துல்ஹமீது, செயற்பொறியாளர் அ. சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் குமாரசாமி, உதவி பொறியாளர் மாயன்முருகன், வைராவிகுளம் ஊராட்சித் தலைவர் எஸ். முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன் மூலம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி, பொட்டல் உள்ளிட்ட பகுதியில் 2756.62 நிலங்கள் பாசன வசதி பெறும்.

முதல் கட்டமாக அணையிலிருந்து 40 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. தேவையை பொறுத்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும். வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை தண்ணீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை அணையின் நீர்மட்டம் 84.96 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 5 கனஅடி நீர்வரத்து இருந்தது. ஏற்கனவே பாபநாசம் அணையிலிருந்து ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முன் கார் பருவ சாகுபடிக்கு 8,124 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →