முகப்பு
தற்போதைய செய்திகள்

பண்ருட்டியில் கடும் வெப்பம்: மக்கள் அவதி

பண்ருட்டியில் கடந்த இரு தினங்களாக கடுமையான வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

பண்ருட்டியில் கடந்த இரு தினங்களாக கடுமையான வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே கடுமையான வெயில் அடிப்பதால் வெப்பத்தின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மழை பெய்ததால் குளிர்ந்த நிலை காணப்பட்டது. ஆனால் எதற்கு எதிர் மாறாக தற்போது வழக்கத்தை விட வெப்பம் வாட்டி வதைக்கிறது.

இதனால் நகரில் கடுமையான அனல் காற்று மற்றும் புழுக்கம் இருந்தது. இதனால் உடல் சோர்வு, கண் எரிசல் போன்றவற்றால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அவதி அடைந்தனர். சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இரவு நேரத்தில் வீட்டினுள் படுத்து தூக்க முடியவில்லை. கொசு தொல்லை மற்றும் திருடர்கள் பயம் உள்ளதால், காற்றோட்டத்திற்காக ஜன்னல் கதவை திறந்து வைக்க முடியாமலும், வெளியில் படுத்து தூங்க முடியாத நிலையில்  மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →