தற்போதைய செய்திகள்

காமராஜர் மணிமண்டபம்: நூலகர், காப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

விருதுநகர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் ஆகிய

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் ஆகிய பணியிடத்திற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.]

இது குறித்து செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஜெயஅருள்பதி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இப்பணியிடத்திற்கு ஆதிதிராவிடர்(முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்), முன்னுரிமையற்றவர்( அருந்ததியர் எவரும் இல்லாத பட்சத்தில்) என்ற இனச்சுழற்சி அடிப்படையில் பணியிடம் நிரப்பட உள்ளது. இதற்கான வயது வரம்பு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.இப்பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஏதாவது பல்கலைக்கழகத்தில் நூலக தகவல் அறிவியல்(சி.எல்.ஐ.எஸ்) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகிற 14-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT