தற்போதைய செய்திகள்

மானிய உரங்கள்: விவசாயம் அல்லாத உபயோகத்திற்கு கடத்தினால் கடும் நடவடிக்கை

மானிய உரங்களை விவசாயத்திற்கு அல்லாமல் மற்ற உபயோகத்தற்கு கடத்தினால் உரக்கட்டுப்பாடு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எஸ். பாண்டியன்

மானிய உரங்களை விவசாயத்திற்கு அல்லாமல் மற்ற உபயோகத்தற்கு கடத்தினால் உரக்கட்டுப்பாடு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சுப்பையா சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

விவசாய உபயோகத்திற்கான இரசாயன உரங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.  இதில், நேரடி உபயோகத்திற்கு மட்டுமின்றி தமிழக அரசால் அங்கிகாரம் பெற்ற கலவை உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மட்டுமே மானிய உரங்களை மூலப்பொருளாக பயன்படுத்தலாம். இது தவிர்த்து மானியத்தில் வழங்கும்  உரங்களை மற்ற உபயோகங்களுக்கு பயன்படுத்தினால் சட்டப்படி குற்றமாகும்.மானியத்தில் வழங்கப்படும் யூரியா உரம் மூலப்பொருளாக பேப்பர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள், பிவிசி பைப்புகள், கதவுகள், ஸ்டீல், மாட்டுத் தீவனம் தயார் செய்யும் நிறுவனங்களிலும், கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையங்ளில் பயன்படுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொழிற்சாலை உபயோகத்திற்கென உரங்களை பயன்படுத்துவோர் டெக்னிகல் கிரேடு யூரியாவினை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

இதர மானிய உரங்களான டிஏபி, பொட்டாஷ் போன்ற உரங்களை தொழிற்சாலை முகவர்களிடம் இருந்து முழு விலையில் வாங்கி உபயோகிக்கலாம். மாநில அரசு இந்த உரங்களுக்கு 4 சதம் மதிப்புக் கூட்டப்பட்ட வரிவிலக்கு அளித்துள்ளது. எனவே  தென்மாநில அளவில் தமிழகத்தில் உரங்களின் விலை குறை என்பதால் பிற மாநிலங்களுக்கு கடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

மாநிலங்களுக்கு இடையே எந்த ஒரு நபரும் உரங்களை மாறுதல் செய்ய இயலாது. அவ்வாறு செய்தால் அது உரக்கட்டுப்பாடு சட்டத்தை மீறிய செயலாகும். வேளாண்மை ஆணையத்தில் உரிமம் பெற்ற உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மட்டுமே தமிழகத்திலிருந்து இதர மாநிலத்திற்கு மத்திய அரசின் வழிகாட்டுதல் படி மாறுதல் செய்ய முடியும். அதிலும் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவினை மற்ற மாநிலங்களுக்கு மாறுதல் செய்யக் கூடாது.

எனவே அரசு விதிமுறை மீறி பக்கத்து மாநிலங்களுக்கு கடத்துதல், தொழிற்சாலை உபயோகத்திற்கு பயன்படுத்தினால் அத்திவாசியப்பொருள் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT