விருதுநகர் ரயில் நிலையத்தில் குருவாயூர்-சென்னை எக்மோர் விரைவு ரயிலில் ஏறிய போது தவறி பிளாட்பாரத்திற்கு இடையே விழுந்த இளைஞர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
குருவாயூர்-சென்னை எக்மோர் வரையில் செல்லும் விரைவு ரயில் காலையில் 10.45 மணிக்கு விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த ரயில் 2 நிமிடம் நேரம் நிற்கும் என்பதால் பயணிகள் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள். அப்போது, விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள்(65) என்பவர் தவறி பிளாட்பாரத்தில் விழுந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் ஏறும் போது தவறி தண்டவாளம் மற்றும் பிளாட்பாரத்திற்கும் இடையே விழுந்துள்ளார்.
அப்போது உடன் வந்தவர்கள் ரயிலில் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரரயிலை நிறுத்தியுள்ளனர். இதில், ரயில் மெதுவாக சென்றதாலும், விழுந்த நிலையில் அப்படியே இருந்ததாலும் எவ்வித காயமும் இ்ல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவத்தால் 10.47 புறப்பட வேண்டிய ரயில் 11 மணிக்கு 13 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்ற அதே ரயிலில் தவறி விழுந்தவரும் ஏறி பயணம் மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.