தற்போதைய செய்திகள்

விருதுநகரில் ஆவின் நிர்வாகத்தை கண்டித்து சாலையில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் ஆவின் நிர்வாகத்தை கண்டித்து 4 வழிச்சாலையில் பாலை கொட்டி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டமைப்பினர்

எஸ். பாண்டியன்

விருதுநகரில் ஆவின் நிர்வாகத்தை கண்டித்து 4 வழிச்சாலையில் பாலை கொட்டி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 வழிச்சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். இச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். இதில், கடந்த 2014 செப்டம்பர் மாதம் முதல் பிரதம பால் உற்பத்தியாளர்கள் அனுப்பிய பாலில் இதுவரை சுமார் ரூ.20 லட்சம் வரை விலையில்லா பால் என கொள்முதல் செய்து, அந்த பாலை ஆவின் நிர்வாகம் விற்பனை செய்யும் விலைக்கே பாலை விற்பனை செய்து மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தனியாரிடம் கூடுதல் விலைக்கு பாலை வாங்குவதை கைவிடவும்,  பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடம் இருந்து கொள்முதல் செய்த பால் தரமில்லையென கூறி திருப்பி சங்கத்திற்கு அனுப்பி வைக்கும் முறையற்ற செயலை கண்டித்தும் இச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் 4 வழிச்சாலையில் ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்யாத பாலை சாலையில் கொட்டினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT