விராலிமலையில் மாரடைப்பு ஏற்பட்டு சரக்கு வேன் ஓட்டுநர் சாவு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் திங்கள்கிழமை வீட்டு உபயோக பொருட்கள் ஏற்றி வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு சரக்கு வேன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் திங்கள்கிழமை வீட்டு உபயோக பொருட்கள் ஏற்றி வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு சரக்கு வேன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
கரூரைச் சேர்ந்த சேது மகன் சரவணன்(40) சரக்கு வேன் ஓட்டுநர், இவர் கடந்த திங்கள்கிழமை(மே, 4) சிவகங்கை மாவட்டம் காரைகுடியில் இருந்து ஒரு சரக்கு வேனில் வீட்டு உபயோக பொருட்களை ஏற்றி கொண்டு விராலிமலை வழியாக கரூர் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேன் விராலிமலை அருகே உள்ள ராஜளிப்பட்டி அருகே திங்கள்கிழமை இரவு வந்த போது ஓட்டுநர் சரவணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, வேனை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, அக்கம்பக்கத்தினரை அழைக்க முற்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.