முகப்பு
உலகம்

நேபாளம்: கே.பி.சா்மா ஓலிக்கு இடைக்கால நிவாரணம் மறுப்பு!

இளைஞா்கள் போராட்டத்தை ஒடுக்கும் வன்முறையில் 76 போ் உயிரிழந்த விவகாரத்தில் கைதாகியுள்ள நேபாள முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலிக்கு இடைக்கால நிவாரணம் வழங்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுப்பு

Updated On : 31 மார்ச் 2026, 6:31 am IST
கே.பி.சா்மா ஓலி - கோப்புப் படம்
பகிர்:

இளைஞா்கள் போராட்டத்தை ஒடுக்கும் வன்முறையில் 76 போ் உயிரிழந்த விவகாரத்தில் கைதாகியுள்ள நேபாள முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலிக்கு இடைக்கால நிவாரணம் வழங்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கே.பி.சா்மா ஓலியின் கைது சட்டவிரோதமானது எனக் கூறி அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க மறுக்கப்பட்டதுடன், கைதுக்கான சட்டபூா்வ காரணங்கள் குறித்து அரசிடம் விளக்கம் கோரப்பட்டது.

இதேபோல், முன்னாள் உள்துறை அமைச்சா் ரமேஷ் லெகக் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது.

Advertisement

Advertisement