முகப்பு
தற்போதைய செய்திகள்

விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயில் சித்திரை திருவிழா: நூற்றுக்கணக்காண பக்தர்கள் தீமிதித்து வேண்டுதல் நிறைவேற்றம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருள்மிகு மெய்கண்ணுடையாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரை 8-ம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:26 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருள்மிகு மெய்கண்ணுடையாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரை 8-ம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதலில்,  நூற்றுக்கணக்காண பக்தர்கள் தீமிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர், நாளை நடைபெறும் படுகளம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்பு.

விராலிமலை அருள்மிகு மெய்கண்ணுடையாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும், வருடம் தோறும் இங்கு சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம், நிகழாண்டுக்காண விழா கடந்த ஏப்ரல், 28- ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை என இருவேளைகளில் அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் 8- ம் நாளான செவ்வாய்க்கிழமை, கோயில் முன்னாள் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில்( தீ குண்டம்) நூற்றுக்கணக்காண பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து தீமிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு, கரும்பு தொட்டி, அங்கபிரதட்ச்சனம், பால்குடம் உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தினர்.

நாளை(புதன்கிழமை) நடைபெறும் படுகளம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்பார்கள் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரனூர் காவல் துணைகண்காணிப்பாளர் பி. ஆறுமுகம் தலைமையில் நூற்றுக்கணக்காண போலிஸார் செய்திருந்தனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.