முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடிப்பு: சிறுவன் சாவு

திருநெல்வேலி நகரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்தனர். இதில் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:29 AM
பகிர்:

திருநெல்வேலி நகரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்தனர். இதில் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள தெற்கு மவுன்ட்ரோடு பகுதியைச் சேர்ந்த சந்தானம் மகன் மந்திரமூர்த்தி (35). தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோமதி (27). இத் தம்பதிக்கு மணிகண்டன் (8), பாக்கியசிரீ (4) ஆகிய குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் 2 ஆம் வகுப்பும், பாக்கியசிரீ யூ.கே.ஜி.யும் முடித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலையில் மந்திரமூர்த்தியின் வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லையாம்.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது, மந்திரமூர்த்தி உள்பட 4 பேரும் பாலில் விஷம் கலந்து குடித்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது தெரியவந்ததாம். தகவலறிந்ததும் திருநெல்வேலி நகரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து 4 பேரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது சிறுவன் மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்ததாக தெரிவித்தனர். மந்திரமூர்த்தி, கோமதி, பாக்கியசிரீ ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கடன் தொல்லை காரணமாக குடும்பத்தோடு தற்கொலை முடிவு செய்து மந்திரமூர்த்தி விஷம் குடித்ததாகத் தெரிகிறது. அதுதான் காரணமா அல்லது யாராலும் மிரட்டப்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம் என்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →