பாளையங்கோட்டை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை
பாளையங்கோட்டை அருகே கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை அருகே கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள படப்பக்குறிச்சி காமராஜர் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணி (40). இவரது மனைவி ஜீவா. தனது உறவினரான சங்கர ஆவுடை என்பவரை கொலை செய்த வழக்கில் ஆயுள்சிறைதண்டனை பெற்ற மணி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலையானார். அதன்பின்பு திருமணம் செய்து வசித்து வந்தார்.
இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வீட்டுக்கு மணி திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது எதிரே பைக்கில் வந்த நபர், அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.