நெல்லை பல்கலை.யில் அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை அலுவலர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை அலுவலர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் காலியாக பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். பல்கலைக் கழக பணியாளர்களுக்கு முறையாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பல்கலைக் கழகத்தில் பணி செய்யும் அனைத்து அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நிர்வாகம் கோரிக்கையை நிறைவேற்றாததை கண்டித்து செவ்வாய்க்கிழமை அனைத்து அலுவலர்களும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். புதன்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வழக்கம்போல் பணிக்கு வந்த அலுவலர்கள் பல்கலை கழகம் முன்பு திரண்டு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து அலுவலகத்தில் அமர்ந்து கோரிக்கை அட்டையினை அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைப்பின் தலைவர் ஜெயசீலன், பொதுச்செயலர் செல்வராஜ், பொருளாளர் மாடசாமி,துணைத் தலைவர் அருணாசலம், இணைச் செயலர்கள் அய்யம்பெருமாள், சங்கரமகாலிங்கம், மாநில துணைத் தலைவர் மாணிக்கவாசகம் உள்பட 220 இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் பல்கலைக் கழகத்தில் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது.
போராட்டக் குழுவினரிடம் பல்கலைக் கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து 5 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டவில்லை. மாலை வரை நடைபெற்ற போராட்டத்தை விலக்கி கொண்ட போராட்டக்குழுவினர் வியாழக்கிழமை அறிவித்தவாறு பல்கலைக் கழகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.