அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மே 28 வரை காவல் நீட்டிப்பு
வேளாண் பொறியியல் துறை அதிகாரி தற்கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப்
வேளாண் பொறியியல் துறை அதிகாரி தற்கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோருக்கு மே 28 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
திருநெல்வேலியில் வேளாண் பொறியியல் துறையில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் முத்துக்குமாரசாமி (57). இவர், கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தச்சநல்லூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இவ் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி, வேளாண் பொறியியல்துறை தலைமை பொறியாளர் மு.செந்தில் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நீதிமன்ற காவல் முடிந்ததைத் தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவர் மன்ற நீதித்துறை நடுவர் ராமலிங்கம், விடியோ கான்பிரன்ஸ் மூலம் இருவரிடமும் விசாரணை நடத்தினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்தபடி அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், செந்திலும் பதிலளித்தனர். விசாரணையின் முடிவில் இருவருக்கும் மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.