ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 350 மீனவர்கள் கைது
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 350 மீனவர்களை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 350 மீனவர்களை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கடலூர் துறைமுகத்தை ஆழப்படுத்தி, துறைமுகத்தின் இருபக்கங்களிலும் 500 மீட்டருக்கு கருங்கற்களைக் கொட்டி தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். மீன்பிடி துறைமுகத்தில் பழுதடைந்த உயர்கோபுர விளக்குகளை பராமரிக்க வேண்டும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்தல். மீன்பிடிக்கும் போது உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம், மீன்பிடி தடைக்காலத்தில் 45 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் வழங்க வேண்டும். மீனவ சமுதாய மாணவ, மாணவிகளின் ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலான கல்விக்கட்டணத்தை அரசே முழுமையாக செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, சுமார் 500க்கும் அதிகமான மீனவர்கள் இயக்கத்தின் தலைவர் பெரு.ஏகாம்பரம் தலைமையில் மாவட்ட ஆட்சியரகம் எதிரே கூடினர். இதற்கு அனைத்து மீனவ கிராம தலைவர்கள் ஆதரவு தெரிவித்து முன்னிலை வகித்தனர். மீனவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் 350 மீனவர்களை கைது செய்தனர்.