ஜூன் 7-ல் உயர்த்தப்பட்ட முதியோர் உதவித் தொகை விநியோகம்: முதல்வர் ரங்கசாமி
புதுவை மாநிலத்தில் வரும் ஜூன் 7-ம் தேதி உயர்த்தப்பட்ட முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுவை மாநிலத்தில் வரும் ஜூன் 7-ம் தேதி உயர்த்தப்பட்ட முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில் எல்லைப்பிள்ளைச்சாவடியில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டப்பட இருக்கிறது. இதற்கான பூமி பூஜையை முதல்வர் ரங்கசாமி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார். உள்ளாட்சி துறை அமைச்சர் என்.ஜி. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சுவாமிநாதன் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியது:
ரூ.8.5 கோடி செலவில் கட்டப்பட இருக்கும் இந்த நீர் தேக்க தொட்டியில் 18 லட்சம் லிட்டர் நீரை தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் ராகவேந்திரா நகர், ஜான்சி நகர், நடேசன் நகர், மாரியம்மன் நகர், பூமியான்பேட் மற்றும் அதனை சார்ந்த மக்கள் பயனடைவர். மாநிலம் முழுவதும் தரமான குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுச்சேரி-விழுப்புரம் பை பாஸ் சாலையை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வரப்படும்.
உயர்த்தப்பட்ட முதியோர் உதவித்தொகை ஜுன் 7-ம் தேதி முதல் வழங்கப்படும் என்றார் ரங்கசாமி.
சுகாதாரக் கோட்டப் பொறியாளர் ஜெயக்குமார், உதவிப் பொறியாளர் சுந்தரமூர்த்தி,இளநிலைப் பொறியாளர் எஸ்.முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதித்திட்டத்தின் கீழ் 12 லட்சம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி, 6 லட்சம் லிட்டர் கீழ் நிலை நீர்த்தேக்கத்தொட்டி, நீரேற்று நிலையம், ஜெனரேட்டர் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிóன்றன.