ஸ்ரீவில்லிபுத்தூர் கோல்டு அரிமா சங்கம் சார்பில் போக்குவரத்துக் காவலர்களுக்கு பேடன் விளக்கு
ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் வசதிக்காக இரவு நேரங்களில் அதிகம் பயன்படும் பேடன் விளக்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் கோல்டு அரிமா சங்கம் சார்பில் போக்குவரத்துக் காவலர்களுக்கு பேடன் விளக்கு
ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் வசதிக்காக இரவு நேரங்களில் அதிகம் பயன்படும் பேடன் விளக்
ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் வசதிக்காக இரவு நேரங்களில் அதிகம் பயன்படும் பேடன் விளக்குகள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோல்டு அரிமா சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோல்டு அரிமா சங்கத்தின் பட்டயத் தலைவர் என்.எஸ்.வேலாயுதம் போலீஸாரின் பயன்பாட்டிற்கான 20 பேடன் விளக்குகளை போக்குவரத்து சார்பு ஆய்வாளர் ரவியிடம் வழங்கினார்.
அப்போது உடன் கோல்ட் அரிமா சங்கத்தின் பொருளாளர் வழக்குரைஞர் த.திருப்பதிராஜ், பொறியாளர் ஜே.பி.பாலசுப்ரமணியன், ஜி.கே.எம்.கார்த்திக், சிட்டி யூனியன் வங்கியின் சுகுமாரன், ராமசாமி, ஜெயகிருஷ்ணன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
கோல்டு அரிமா சங்கத்தின் சேவையை, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.முரளிதரன் பாராட்டினார்.