ஸ்ரீவில்லிபுத்தூர் கருவூலக் கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் கருவூலத்தில் 20.3.15-ம் தேதி நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீஸார் புதன்கிழமை நீதிமன்றத்தில்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் கருவூலக் கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் கருவூலத்தில் 20.3.15-ம் தேதி நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீஸார் புதன்கிழமை நீதிமன்றத்தில்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் கருவூலத்தில் 20.3.15-ம் தேதி நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீஸார் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
கருவூலத்திலிருந்து பலதரப்பட்ட நீதிமன்ற சொத்துக்களான ரொக்கப் பணம், தங்கம், வெள்ளி, செல்போன் மற்றும் கடிகாரங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்களை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுவிட்டார்கள். இது குறித்த சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் அ.சி.வெள்ளையன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை தீவிரமாக துப்பு துலக்கி, மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, தாதான்குளத்தைச் சேரந்த சின்னச்சாமி மகன் காளிராஜ் என்ற காளிமுத்து, டி.கல்லுப்பட்டி, வி.வெங்கடாசலபுரம் முருகேசன் மகன் வழக்குரைஞருக்கு படித்து வரும் சுப்புராஜ், சிவகாசி தாலுகா முதலிபட்டியைச் சேர்ந்த ஊர்க்காவலன் மகன் மாரிமுத்து, சிவகாசி கிழக்கு முத்துராமலிங்காபுரம் காலனி ஜீவானந்தம் மகன் முத்துக்காமாட்சி என்ற செல்வம், இதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் தவசி என்ற தவசீலன் ஆகிய 5 பேரைக் கைது செய்து பொருட்களை மீட்டனர்.
இதில் முக்கிய குற்றவாளியான மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி, வி.வெங்கடாசலபுரம் சுப்பு மகன் முருகேசன் (52) என்பவர் தலைமறைவாக இருந்தார். இவரை டி.எஸ்.பி. வெள்ளையன் தலைமையிலான தனிப் படை ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேடி வந்தது. இந்நிலையில் இவரை இப் படையினர் கைது செய்தனர். முருகேசன் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நீதிபதி பசும்பொன் சண்முகையா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், மல்லி, சேடபட்டி, கொட்டாம்பட்டி, அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது.
இந்த வழக்கில் அனைத்துக் குற்றவாளிகளையும் விரைவாகக் கைது செய்து, பொருட்களை மீட்ட, தனிப்படை டி.எஸ்.பி. அ.சி.வெள்ளையனை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மற்றும் உயரதிகாரிகள் பாராட்டினர்.