முகப்பு
தற்போதைய செய்திகள்

பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு: கருணை ஆறு, ராமநதியில் வெள்ளப்பெருக்கு

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கருணை ஆறு, ராமநதியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:25 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கருணை ஆறு, ராமநதியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்):

பாபநாசம் அணை 30, பாபநாசம் கீழ் அணை 18, சேர்வலாறு அணை 14, மணிமுத்தாறு அணை 20.4, கடனாநதி அணை 15, ராமநதி அணை 18, கருப்பாநதி அணை 43, குண்டாறு அணை 11, அடவிநயினார் அணை 44, நம்பியாறு அணை 10, கொடுமுடியாறு அணை 15.

பிற பகுதியில் பதிவான மழை: மூலக்கரைப்படி 24, களக்காடு 19.2, அம்பாசமுத்திரம் 23, சேரன்மகாதேவி 35, பாளையங்கோட்டை 8.4, திருநெல்வேலி 29.3, சங்கரன்கோவில் 36, சிவகிரி 61, கன்னடியன் அணைக்கட்டு 23, ஸ்ரீவைகுண்டம் 5, தென்காசி 37, செங்கோட்டை 14, ஆய்க்குடி 50.8, ஆலங்குளம் 60.2, ராதாபுரம் 38, நான்குனேரி 54.

வெள்ளப்பெருக்கு: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1828.66 கனஅடி, சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 900 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 479 கனஅடி, கடனாநதி அணைக்கு விநாடிக்கு 284 கனஅடி, ராமநதி அணைக்கு விநாடிக்கு 83.03 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 133 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 144 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 50 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் கருணை ஆறு, ராமநதியில் ஞாயிற்றுக்கிழமை மழை நீர் கரைபுரண்டு ஓடியது. திடீரென ஏற்பட்ட வெள்ளம், அடுத்த சில மணி நேரங்களில் மழை குறைந்ததால் ஆற்றில் நீர்வரத்து குறைந்தது.

மணிமுத்தாறு அருவியில் 3 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. பெண்கள் குளிக்கும் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளித்தனர். நீர்மட்டம் உயர்வு: 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 5.50 அடி உயர்ந்து 101 அடியாக இருந்தது. 84 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி, ராமநதி அணைகளின் 70 அடியை எட்டியுள்ளதால் இவ்விரு அணைகள் ஓரிரு நாளில் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 79.50 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2.20 அடி உயர்ந்து 97.41, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 63.60 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 70 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 2.25 அடி உயர்ந்து 69.25 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 17.50 அடியாகவும் இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →