முகப்பு
தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் பல்கலை. சர்வதேச ஆராய்ச்சித் துறைக்கு உலக அளவில் 16-வது இடம்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக சர்வதேச ஆராய்ச்சித் துறைக்கு உலக அளவில் ஸ்பெயின் பல்கலைக்கழக ஸிமாகோ ஆய்வில் 16-வது இடம் கிடைத்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:27 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக சர்வதேச ஆராய்ச்சித் துறைக்கு உலக அளவில் ஸ்பெயின் பல்கலைக்கழக ஸிமாகோ ஆய்வில் 16-வது இடம் கிடைத்துள்ளது.

ஸிமாகோ பல்கலைக்கழக தகுதிகளுக்கு, ஸ்பெயினில் உள்ள கிராநாடா பல்கலைக்கழகம் மூலம் ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்படுகிறது. இதில் ஐயாயிரத்து நூறுக்கும் மேற்பட்ட உலக கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சித் துறை குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படும்.

இதன்படி 2014-15-க்கான ஆய்வு அறிக்கையை ஸிமாகோ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.இந்த ஆய்வில், கல்வி நிறுவனங்களின் வெளி நாட்டு உறவுடன் செய்யும் ஆராய்ச்சியில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் 16-வது இடம் பெற்றுள்ளது.

அறிவியல் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்து அதற்கான வடிவமைப்பு உரிமை பெற்றமைக்காக 18-வது இடமும், உயர் தரமான ஆராய்ச்சி செய்துள்ளவர்கள் வரிசையில் 24-வது இடமும் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்துள்ளது.

உலக சராசரி ஆராய்ச்சி செய்யும் உயர்ந்த நிறுவனங்கள் வரிசையில் 28-வது இடமும், உயர்தரமான ஆராய்ச்சி கட்டுரைகளை மிகவும் சிறந்த ஆராய்ச்சி மலரில் வெளியிட்டுளமைக்கு 51-வது இடமும் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்துள்ளது.

புதிய முறையில் அறிவுசால் கட்டுரை வெளியிட்டமைக்கு 62-வது இடமும், அதிக ஆராய்ச்சியாளர்களைப் பெற்றுள்ளமைக்கு 130-வது இடமும் ஸ்கோப்பஸ் கட்டுரை மலரில் வெளியிட்டுள்ளமைக்கு 134-வது இடமும், சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டதில் 140-வது இடமும், கூகுளில் மிக அதிகமான பக்கங்களைக் கையாள்வதில் 148-வது இடத்தையும் பெற்றுள்ளது என்று இணைய தளம் வெளியிட்டுள்ளது.

பல்வேறு தகுதியான உயர் இடங்களை உலகளவில் பெற்றுள்ள கலசலிங்கம் பல்கலைக்கழக சர்வதேச ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள், கட்டுரைகள் சமர்ப்பித்த பேராசிரியர்கள் ஆகியோரை செவ்வாய்கிழமை அழைத்து வேந்தர் க.ஸ்ரீதரன், இயக்குநர் டாக்டர் எஸ்.சசிஆனந்த், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

முழு கட்டுரையைப் படிக்க →