முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை தாக்கி பாலியல் தொல்லை: இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுமியை இன்று கீழே தள்ளிவிட்டு தாக்கி,

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:27 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுமியை இன்று கீழே தள்ளிவிட்டு தாக்கி, பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் உள்ள கோப்பையநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கையர்கரசு. இவரது 11 வயது மகள், பாப்பையாநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சைக்கிளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, சிவகாசி, தேவர்குளம் ரோடு, குருகாலனியைச் சேர்ந்த மாசாணமுத்து (எ) மணிகண்டன் (19) என்பவர் வழிமறித்து, சைக்கிளில் இருந்து சிறுமியை கீழே தள்ளிவிட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமி மல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாசாணமுத்து (எ) மணிகண்டனைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →