முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஆதிதிராவிட மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு: மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

விருதுநகர் மாவட்ட அளவில் அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஆதிதிராவிடர்

தற்போதைய செய்திகள்

அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஆதிதிராவிட மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு: மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

விருதுநகர் மாவட்ட அளவில் அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஆதிதிராவிடர்

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:30 AM
பகிர்:

விருதுநகர் மாவட்ட அளவில் அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஆதிதிராவிடர் இன மாணவ மாணவியருக்கு திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் நலத் திட்டங்கள் பெறுவது தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து நேரடியாக ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள், தனிநபர் வழங்கி மனுக்கள் ஆகியவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து துறை வாரியாக ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும் தங்களுக்குரிய அனைத்து கோப்புகளின் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது துறை அலுவலர்கள் உடனுக்குடன் துரித நடவடிக்கை எடுத்து மனுக்கள் நிலுவை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு வரும் மனுக்களுக்கு உடனடியாக விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஆட்சித்தலைவர்.

2014-15-ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்2 அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஆதிதிராவிட மாணவ மாணவியருக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை ஆட்சித் தலைவர் வழங்கி பாராட்டினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நாகஜோதி உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →