முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுக்கோட்டையில் குவிந்துள்ள ஐயப்ப, முருக பக்தர்களின் விரத மாலைகள்

புதுக்கோட்டையில் கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி ஐயப்பசுவாமி, சுப்பிரமணியசுவாமிக்கு விரதமிருந்து செல்லும் பக்தர்களுகான துளசி மாலை, ருத்தராட்ச மாலை, காவி வேஷ்டி, துண்டுகள் கடைகளில் குவிந்துள்ளன.

Updated On : 16 நவம்பர், 2015 at 6:34 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:03 PM

புதுக்கோட்டையில் கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி ஐயப்பசுவாமி, சுப்பிரமணியசுவாமிக்கு விரதமிருந்து செல்லும் பக்தர்களுகான துளசி மாலை, ருத்தராட்ச மாலை, காவி வேஷ்டி, துண்டுகள் கடைகளில் குவிந்துள்ளன.

புதுக்கோட்டை கிழக்குராஜவீதியில் உள்ள காதி பவனில் கார்த்திகை மாதத்தில் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கும், முருகனை தரிசிக்க பாதயைத்திரையாக பழனிக்கும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் செல்கின்றனர்.

இந்த பக்தர்கள் விரதமிருந்து காவி நிறம், கருப்பு நிறம் உள்ளிட்ட பல வண்ண  வேஷ்டிகள் அணிந்து, கழுத்தில் துளசி மாலை, ருத்ராட்சமாலை, மணிமாலை அணிவது வழக்கம். இவர்கள்  புதுக்கோட்டையிலுள்ள பல்வேறு ஆலயங்களில் உள்ள சிவாச்சாரியார்கள், குருசாமிகள் மூலம்  மாலை அணிந்து கொள்வதை பார்க்க முடியும்.

Advertisement

இந்நிலையில்,  புதுக்கோட்டை கிழக்கு ராஜவீதியில் ஸ்டேட் வங்கி எதிரே உள்ள காதிபவனில் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட 54, 108 எண்ணிக்கை கொண்ட ருத்ராட்சமாலைகள், அதில் இணைக்கக்கூடிய ஐயப்பன், முருகன் உருவம் பொறித்த டாலர்களும், மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட பல தெய்வங்களின் உருவ டாலர்கள், பல்வேறு வண்ண  வேஷ்டிகள், துண்டுகள் ஆகியவை விற்பனைக்கு தயார்நிலையில் உள்ளதாக அதன் மேலாளர் ரமேஷ் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி  ஏராளமான  பக்தர்கள் மாலைகள், டாலர்களையும் வாங்கிச்சென்றனர்.

புதுகை கிழக்கு ராஜவீதியுள்ள காதிபவனில் சபரிமலை, பழனிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக குவிந்துள்ள மணி மாலைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.