முகப்பு
தற்போதைய செய்திகள்

இளம் பெண்ணை தாயாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்தவருக்கு 10 ஆண்டு சிறை 

திருச்சி லால்குடி இனாம் சமயபுரத்தை சேர்ந்த சுரேஷ் (25) இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:33 AM
பகிர்:

திருச்சி லால்குடி இனாம் சமயபுரத்தை சேர்ந்த சுரேஷ் (25) இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர வீட்டுக்கு அருகில் இருந்த இளம் பெண் ஒருவருடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அந்த பெண்ணை சுரேஷ் பலவந்தப்படுத்தியுள்ளார். இதையடுத்து அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த பெண் வலியுறுத்தியுள்ளார். ஆனால் சுரேஷ் அதற்கு மறுத்து வந்ததால் லால்குடி மகளீர் காவல் நிலையதில் அந்த பெண் கடந்த 2012ம் ஆண்டு புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட மகளீர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. டின்.என்.ஏ.டெஸ்ட் எடுத்ததில் குழந்தைக்கு சுரேஷ்தான் தந்தை என தெரியவந்தது. இந்நிலையில் இன்று சுரேஷுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.