முகப்பு
தற்போதைய செய்திகள்

பக்தர்களை விரட்டி அடித்து பரணி தீப தரிசனம் செய்த ஐ.ஜி

பரணி தீபம் காண பக்தர்கள், முக்கிய பிரமுகர்களை விரட்டி அடித்து விட்டு தீப தரிசனம் செய்தார் ஐ.ஜி. ஜெயராம்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:38 AM
பகிர்:

பரணி தீபம் காண பக்தர்கள், முக்கிய பிரமுகர்களை விரட்டி அடித்து விட்டு தீப தரிசனம் செய்தார் ஐ.ஜி. ஜெயராம்.

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழா, புதன்கிழமை (நவ. 25) நடைபெறுகிறது. இதையொட்டி பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.

 சிவனின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 நவம்பர் 21-ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 22-ஆம் தேதி கொட்டும் மழையில் பஞ்ச ரதங்களின் தேரோட்டமும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

பரணி தீபம் ஏற்றுவதை காண வந்த முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் மூலவர் சன்னதி அருகே கூடினர். அப்போது திடீரென ஐ.ஜி. ஜெயராம்  மற்றும் அவரது தலைமையிலான 50 போலீஸார் திடீரென உள்ளே புகுந்து, பக்தர்கள், முக்கிய பிரமுகர்களை பிடித்து இழுத்து வெளியேற்றிவிட்டு பரணி தீபம் தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வந்த ஐ.ஜி. ஜெயராம் மற்றும் போலீஸாரின் இந்த செயல்பாடுகள் பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.