சீன பட்டாசு இறக்குமதியால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்: திருமாவளவன்
சீன பட்டாசு இறக்குமதியால், தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார்.
தற்போதைய செய்திகள்சீன பட்டாசு இறக்குமதியால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்: திருமாவளவன்
சீன பட்டாசு இறக்குமதியால், தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார்.
சீன பட்டாசு இறக்குமதியால், தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:
சீன பட்டாசுகள் இறக்குமதியால், தமிழகத்தில் குறிப்பாக சிவகாசி பகுதியில் இத் தொழிலை நம்பியுள்ள சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு, விசாரணை ஆணையம் அமைத்து, இந்திய அரசிடம் முறையிட்டு தொழிலாளர்களின் நலனைக் காக்க வேண்டும்.
தமிழகத்தில் பருவ மழையால் ஏற்பட்ட மழை, வெள்ளம் சேதத்தை மதிப்பிட மத்திய அரசு மிகத் தாமதமாக ஒரு குழுவை அனுப்பியுள்ளது. அவர்களும் சில இடங்களை மட்டுமே பார்வையிட்டுவிட்டு, விடைபெற்றுவிட்டனர். உண்மையான சேதங்களை அவர்கள் மதிப்பிடவில்லை. தமிழக முதல்வர் வெள்ள சேதத்தை மதிப்பிட உடனடியா ஒரு குழுவை அமைக்க வேண்டும். முழுமையான பாதிப்புகள் குறித்து தமிழக அரசு பிரதமரிடம் அறிக்கை அளிக்க வேண்டும். மத்திய அரசு, தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். இந்த தொகை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டதை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும்.
மக்கள் நல கூட்டு இயக்கத்தின் சார்பில் நான்கு தலைவர்கள் கலந்து கொள்ளும் குறைந்தபட்ச செயல் திட்டத்தை விளக்கும் பொதுக் கூட்டம் மதுரையில் டிசம்பர் 12-ம் தேதி நடைபெறுகிறது. இதன் மூலம் கூட்டு இயக்கம் வலுப்பெறும். ஜனநாய சக்திகள் வந்து இந்த கூட்டு இயக்கத்தில் இணைய வேண்டும். மது இல்லா, ஊழல் இல்லா தமிழகத்தை விரும்பும் அனைவரும் இக் கூட்டணிக்கு வருவார்கள் என்று நம்பிக்கைத் தெரிவித்தார் அவர்.