முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் சாவு

விருதுநகர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர்.     திருச்சுழி அருகே குலசேகரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் என்பவரின் மகன் சின்னமருது(23). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வருகிறாராம்.

Updated On : 13 அக்டோபர், 2015 at 5:48 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:27 PM

விருதுநகர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர்.     திருச்சுழி அருகே குலசேகரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் என்பவரின் மகன் சின்னமருது(23). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வருகிறாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை பணிக்கு சென்று பிற்பகல் சாப்பிடுவதற்காக குடியிருப்பு வளாகத்திற்கு சாப்பிடுவதற்காக சாலையில் நடந்து சென்றாராம். அப்போது, மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சென்ற கமுதி அருகே கீழமுடி மன்னார்கோட்டையைச் சேர்ந்த முத்துராமலிங்கம்(34) என்பவரின் இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் சின்னமருது படுகாயம் அடைந்த நிலையில் அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரர் பெரிமருது திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து முத்துராமலிங்கத்தை கைது செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

   விஷமாத்திரை தின்று தொழிலாளி சாவு: திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன்(52). இவர் கூலிக்கு ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் வேலைபார்க்கும் கூலியை வைத்து நாள்தோறும் மதுகுடிப்பாராம். இதை அவரது இளைய மகன் கண்டித்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் திங்கள்கிழமை பன்றிக்கும் வைக்கும் விஷமாத்திரையை தின்றாராம். உடனே அக்கம் பக்கத்தினர் பார்த்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தார்களாம். அதைத் தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தாராம். இது தொடர்பாக அவரது மகன் ரமேஷ் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.        

    சைக்கிளில் தவறி வழுந்தவர் சாவு: விருதுதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்த சேர்ந்தவர் முத்து(50). இவர் கடந்த 3 நாள்களுக்கு முன்பு அல்லம்பட்டியில் இருக்கும் மகனை பார்ப்பதற்கு சைக்கிளில் சென்றாராம். பின்னர் பார்த்துவிட்டு திரும்புகையில் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தாராம். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அதையடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் செவ்வாய்கிழமை அதிகாலையில் உயிரிழந்தார். இதுகுறித்து விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் அவரது மகன் நாகஜோதி(24) புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.