FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலைவலம்!

சென்னை தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம் மேற்கொண்டது குறித்து...

Updated On : 19 ஏப்ரல் 2026, 7:52 pm IST
தேனாம்பேட்டையில் சாலைவலம் மேற்கொண்ட மு.க. ஸ்டாலின் - யூடியூப் / M.K. STALIN
பகிர்:

சென்னை தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 19) சாலை வலம் மேற்கொண்டார்.

சாலையில் இருபுறங்களிலும் மக்கள் திரண்டு நின்று மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் தங்கள் கட்சிக் கொடுகளுடன் மு.க. ஸ்டாலினை வரவேற்றனர்.

தியாகராய நகர் முதல் அண்ணா அறிவாலயம் வரை சாலைவலம் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது. அந்தவகையில், மூன்று வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரின் சாலைவலம் அமையவுள்ளது.

Advertisement

Advertisement

மயிலாப்பூரில் சாலைவலம் மேற்கொண்டபோது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

''கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக்கூடியவராக மயிலை வேலு திகழ்கிறார். அவர் உங்கள் தொகுதிக்கு செய்த பணிகள் உங்களுக்குத் தெரியும். அதனால் மீண்டும் அவரைத் தேர்ந்தெடுத்து உங்கள் தொகுதியில் போட்டியிட வைத்துள்ளேன். என் நம்பிக்கைக்கு ஏற்ப உதய சூரியனுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.

summary

TN Election 2026 Chief Minister M.K. Stalin Road show the Streets of Teynampet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments